மலையில் இருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

சிறிய சிறிபாத மலையில் இருந்து பிரித்தானிய பிரஜை ஒருவர் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.